Wednesday, May 16, 2007

எனது ஊர் - அசகளத்தூர்

இரண்டு பக்கம் ஆறுகளாலும், இரண்டு பக்கம் ஏரிகளாலும் சூழப்பட்டது இந்த கிராமம். மக்கள் தொகை 7000-க்கும் மேல்.மிகவும் பசுமையான கிராமம். முக்கிய வருமானம் தரும் தொழில், விவசாயம்.
ஒரு மேல் நிலை பள்ளி உள்ளது. தபால் நிலையமும், நூலகமும் உள்ளன. அனைத்து தெய்வங்களுக்கும் கோயில்கள் உள்ளன். பெரியாயி அம்மனுக்கு, ஒவ்வொரு வருடமும் நடக்கும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
கள்ளக்குறிச்சியிலிருந்து, பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மூன்று அரசுப்பேருந்துகளும், ஒரு தனியார் பேருந்தும் இயக்கப்படுகின்றன.
படித்தவர்கள் விழுக்காடு தோராயமாக, 40 விழுக்காடு.
நெல், கரும்பு, கிழங்கு , சோளம், எள் , கேழ்வரகு , உளுந்து, மக்காச்சோளம் மற்றும் துவரை அகிய பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
வீட்டுக்கு ஒருவராவது, திரைகடல் ஒடி திரவியம் தேடுவதால், பொருளாதார நிலையில் சிறந்து விளங்கும் ஊர். இதனால் முக்கியமாக நிகழ்ந்தவை:
1. அனைவரும் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர்.
2. இடத்தின் விலை பன்மடங்கு உயர்ந்து விட்டது.
3. அனைவரின் வீட்டிலும் , ஒரு சோனி தொலைகாட்சி இருக்கிறது.
(நல்லதா? கெட்டதா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்)

மற்றபடி சொல்லுவதற்க்கு ஒன்றும் இல்லை.
Posted by Picasa

3 comments:

காளீஸ்வரன் முத்துசாமி said...
This comment has been removed by the author.
விஜயபாபு பூபதி said...

நண்பரின் வருகைக்கு நன்றி.

காளீஸ்வரன் முத்துசாமி said...

உனக்கு என்ன பெறிய வெங்காய சரித்திரம் இருக்குன்னு எழுத ஆரம்பிச்சுட்ட... ஊருல செவுர ஏரி குதிச்சு சொம்பு திருடுன மொன்ன நாய்... (இவன் இந்தியா வரும் போது கண்ணுலயே மாட்ட ௯டாது...)

இப்படி எழுதியிருக்கியே எந்த புத்தகத்த பாத்து பிட் அடிச்ச... (ஒருவேலை தாவுத் ௯ட்டத்துல சொல்லி அடிக்க சொல்லுவானோ... நம்மளை அடிச்ச அது அவனுக்கு தான் கேவலம்...)


ஏன்டா வெட்கம், மானம், சூடு, சொரனை எல்லம் கிடையதா...( அதெல்லாம் இருந்தா நம்ம ௯ட நட்பு வெட்சுப்பனா... உடு. உடு.. இதெல்லாம் சகஜம்...)